இந்தியா, மார்ச் 23 -- தமிழ்நாட்டில் இன்னும் பல ஹெச்.ராஜாக்கள் உருவாக வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் அழிந்துவரும் இனமாக பிராமணர் இனம் உள்ளதாக திரைப்பட இயக்குநர் மோகன் ஜி வேதனை தெரிவித்து உள்ளார்.

உலக பிராமணர் சங்கத்தின் 11ஆம் ஆண்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், திரைப்பட இயக்குநர் மோகன் ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய திரைப்பட இயக்குநர் மோகன் ஜி, சமீபத்தில் 'பேட் கேர்ள்' என்ற திரைப்பட ட்ரைலரில் பிராமண குடும்பத்தை பற்றி தவறாக பேசி இருந்தனர். அதை பற்றி முதலில் ட்வீட் போட்டது நான்தான். அது ஒரு பெரிய இயக்கமாக மாறிவிட்டது. இதனால் அத்திரைப்படம் சென்சாருக்கே செல்ல பயந்து வருகிறது. நீங்கள் ஒற்றுமையாக இருந்ததால்தான் இதை செய்ய முடிந்தது. நமக்கு ...