இந்தியா, ஏப்ரல் 29 -- இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறி உள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சி பொங்க பேசிய உரையில், திராவிட முன்னேற்றக் கழக (திமுக) ஆட்சியின் கடந்த நான்கு ஆண்டுகளில் பெற்ற சாதனைகளை பெருமையுடன் பட்டியலிட்டார். தலைவர் கலைஞர் கருணாநிதியின் எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்ட திட்டங்களே இந்த வெற்றிகளுக்கு காரணம் என அவர் தெரிவித்தார். "இதுவரை நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், செய்துள்ள சாதனைகளால் 7வது முறையும் திமுகதான் ஆட்சி அமைக்கும்." என தெரிவித்தார். "ஸ்டாலின் என்றால் 'உழைப்பு உழைப்பு உழைப்பு' என கலைஞர் கூறுவார்." ஆனால் "கலைஞர் இப்போது இருந்திருந்தால் ஸ்டாலின் என்...