இந்தியா, பிப்ரவரி 27 -- தமிழ்நாட்டில் தமிழ்க் கட்டாயப்பாடம், பயிற்று மொழி ஆவது எப்போது? தெலுங்கானா ஆட்சியாளர்களிடம் தாய்மொழிப் பற்றைக் கற்றுக்கொள்ளுங்கள் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களை பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாயப் பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தெலுங்கானாவில் தெலுங்கை கட்டாயப்பாடமாக்கும் சட்டம் 2018&ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி கடந்த 2022&23ஆம் ஆண்டி...