பீகார்,சென்னை, பிப்ரவரி 26 -- தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு விழா : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் ஓர் ஆண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, சென்னை அருகே மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் தேர்தல் வியூகவகுப்பாளரும், ஜன் சூரஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார். இதோ அவர் பேசியதாவது:

''ஒவ்வொரு தலைவரும் தமிழ்நாட்டிற்கு வந்து வணக்கம் என்று சொன்னால் தமிழர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என்று அறிவார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம், ஒரு திரைப்படத்திற்கு சமமானது என்று நான் ஆச்சரியப்படுகிறேன் . உங்கள் தலைவர் பேச்சை கேட்க நீங்கள் உற்சாகமாக இருக்கிறீர்கள், எனவே நான் உங்கள் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளப் போவதில்லை. சில ...