சென்னை, ஆகஸ்ட் 24 -- சென்னையில் நடைபெற்ற எதிர்க்கட்சி கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசர் சுதர்சன் ரெட்டியை ஆதரித்து, முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பேசியதாவது:

சுதர்சன் ரெட்டி அவர்கள், அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாக்கும் உச்சநீதிமன்ற நீதியரசராக பணியாற்றிய அவர், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு மிகவும் தகுதிவாய்ந்தவர். அதனால்தான், இந்தியா கூட்டணி சார்பில், உங்களை வேட்பாளராக அறிவித்திருக்கிறோம்! உங்களை ஒருமனதாக தேர்ந்தெடுத்து அறிவித்த இந்தியா கூட்டணியின் அனைத்து தலைவர்களுக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இந்தியா கூட்டணியினர் மட்டுமில்லை, ஜனநாயகத்தின் மீது மக்களாட்சித் தத்துவத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற அத்தனை பேரும் உங்களைத்தான் குடியரசுத் துணைத் த...