இந்தியா, பிப்ரவரி 22 -- நேற்றைய தினம் துணை குடியரசு தலைவர் ஜகதீப் தங்கர் 'ஒரு பிராந்தியத்தை அழிக்க வேண்டும் எனில் அந்த மொழியை அழித்தால் போதும்' என்று பேசி உள்ளார். மும்மொழிக் கொள்கை தமிழை மெல்லக் கொள்ளும் கொள்கை என துணை ஜனாதிபதி சொல்லி உள்ளாரா?, பாஜக, ஆர்.எஸ்.எஸ்., மோடி அரசு மும்மொழிக் கொள்கையை கையில் எடுத்து உள்ளது. தமிழை அழிக்கும் முன்னோட்டம் இது.

நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் என்பதில் உறுதியாக இருந்தோம். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் காங்கிரஸ் செயல்பட்டது. ஆனால் மாநில உரிமைகளை பறிக்கும் பாஜகவை வன்மையாக கண்டிக்கிறோம்.

நூறு விழுக்காடு பணம் கொடுத்துவிட்டதாக அண்ணாமலை கூறுகிறார். அப்படியென்றால் அவர் வெள்ளை அறிக்கை தர தயாரா?, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை,தூ...