இந்தியா, ஏப்ரல் 18 -- "தமிழ்நாடு என்றும் டெல்லிக்கு OUT OF CONTROL-தான்" என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசையும் பாஜகவையும் கடுமையாக விமர்சித்து, "டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்கும் அடிபணியாது. தமிழ்நாடு எப்போதும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல்தான்," என பரபரப்பு கருத்தை முன்வைத்தார். மாநில உரிமைகளுக்காக திமுக தொடர்ந்து போராடி வருவதாகவும், 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் எனவும் அவர் பேசினார்.

முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்குவதற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார். "இதன் மூலம் 15,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குரல் உள...