இந்தியா, ஜூன் 22 -- தமிழ்நாட்டில் அந்நிய முதலீடு குறைந்து வருவதை புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டி தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை சாடியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா காலகட்டத்தில் கூட, இந்தியாவின் வளர்ச்சி எதிர்மறையாக இருந்த சமயத்தில் தமிழ்நாட்டில் வளர்ச்சி நேர்மறையாக இருந்தது. அப்போது,யாரும் தமிழக பத்திரிகைகளில் முதல் பக்க விளம்பரம் கொடுத்துக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.

அந்த அறிக்கையில், " முதலமைச்சர் ஸ்டாலின், உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு "நம்பர் ஒன்" மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்ப...