இந்தியா, மார்ச் 7 -- "மாணவர்களின் நலனுக்காக தமிழகத்தில் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியை தமிழில் தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை பிரிவின் 56வது நிறுவன தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். சி.ஆர்.எஃப் வீரர்கள் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்த அவர், மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 'சென்டினல்' இதழை அவர் வெளியிட்டார்.

இந்தி திணிப்பு, மும்மொழிக் கொள்கை மற்றும் தேசியக் கல்விக் கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தினமும் அறிக்கைகளை வெளியிட்டு வரும் நில...