இந்தியா, மார்ச் 6 -- உலக ரசிகர்களால் இசைஞானி என்று அழைக்கப்படக்கூடிய இசையமைப்பாளர் இளையராஜாவின் முதல் சிம்பொனி நேரடி நிகழ்ச்சி லண்டனில் உள்ள அப்போலோ அரங்கத்தில் வருகிற 8ஆம் தேதி (08.03.2025) நடைபெற இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜா இன்று(மார்ச்.6) காலை லண்டன் புறப்பட்டார். அதன்பின், அவரது மூத்த மகன் கார்த்திக் ராஜா லண்டன் புறப்பட சென்னை விமான நிலையம் வந்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்திக் ராஜா, தனது தந்தை இளையராஜாவின் சிம்பொனி லைவ் நிகழ்ச்சி பல்வேறு தகவல்களைப் பகிர்ந்தார்.

சென்னை விமான நிலையத்தில் கார்த்திக் ராஜா பேசியதாவது,

''நம்மை ஆண்ட ஆங்கிலேய நாட்டுக்குப் போயி, அவங்க ஊரில் அவங்களுக்கே போயி, டேக்கா காண்பிக்கிறதுன்னு சொல்வாங்கல, அவங்க ஊரிலேயே போயி, நான் செஞ்சு காண்பிக்கிறேன்னு நம்ம ஊரு ஆளு போகும்போது ஒரு தமிழ...