இந்தியா, மார்ச் 15 -- அதிமுக ஆட்சி உடன் ஒப்பீடும் போது 21ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறையை தமிழ்நாடு அரசு குறைத்து உள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழக அரசின் 2025-26 வரவு செலவு திட்டத்தின் நிதி மேலாண்மையை நான் பாராட்டுகிறேன் முதலீடுகள் செய்வது முக்கியமல்ல. ஆனால் சாலைகள், திட்டங்களை நிறைவேற்றும் போது, தரத்தையும் தமிழக அரசு கண்காணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள வங்கி அதிகாரிகளை அழைத்து கடன் வழங்குவதை நிதி அமைச்சர் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 3% என்பதை பாராட்டுகிறேன். காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தில் முன்னாள் மு...