Chennai, மார்ச் 17 -- தமிழக அமைச்சர்கள் பெரிய கருப்பன் மற்றும் சிவசங்கர் மீதான வழக்குகள் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன், அரியலூரில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முறையான அனுமதியின்றி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதாக தற்போதைய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் மீது 2 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. அதேபோல், கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி, பிரசாரம் செய்ததாக,சிவசங்கர் மீது தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வழக்குகள் யாவும் அரியலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. இதனை ரத்து செய்யவேண்டும் என அமைச்சர் சிவசங்கர் தரப்பில், சென்னை உயர...