இந்தியா, மார்ச் 3 -- தமிழ்நாடு இந்தியை ஏற்றால் உத்தரப்பிரதேசத்தில் இருந்து இந்தி ஆசிரியர்களை மத்திய அரசு அனுப்பிவிடும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கார்த்தி சிதம்பரம், தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையே போதும். நான் ஸ்டேட் போட் மெட்ரிக்குலேஷன் பள்ளியில்தான் படித்தேன். எனக்கு தமிழ், ஆங்கிலம்தான் தெரியும். நான் இந்தி படித்தது இல்லை; எனக்கு இந்தி தெரியவும், தெரியாது. எனது மகளுக்கும் இந்தி தெரியாது.

என்னை பொறுத்தவரை இந்தியை கட்டாய பாடமாக ஏற்றுக் கொள்ளவே முடியாது. வட இந்தியாவில் இருந்து பலர் நம்ம பகுதிக்கு வேலை வருகிறார்கள். அவன் என்ன திருக்குறள், ஆத்திச்சூடியை படித்துவிட்டா வருகிறான். அவனுக்கு பாஷையே தெரியாது. அதனால் அவனை விரட்டியா அடிக்கிறோ...