இந்தியா, மே 19 -- விஷாலும் தன்ஷிகாவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். சென்னையில் யோகிடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இந்த அறிவிப்பை இருவரும் வெளியிட்டு இருக்கிறார்கள்

இந்த அறிவிப்பு குறித்து விஷால் பேசும் போது, 'உங்கள் எல்லோரையும் பார்ப்பதற்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; இங்கு தன்ஷிகாவின் அப்பா வந்திருக்கிறார். அவருடைய அனுமதியோடு நான் இதனை அறிவிக்கிறேன்; நாம் இப்போது யோகிடா படத்தின் நிகழ்வில் இருக்கிறோம்.

அந்த நிகழ்வில் என்னுடைய பர்சனல் சம்பந்தமான விஷயங்களை பேசக்கூடாதுதான். இருப்பினும் இங்கு என்னுடைய ஒத்த ஆன்மாவான தன்ஷிகா இருக்கிறார். இதற்கு மேல் நாங்கள் மூடி மறைக்க விரும்பவில்லை. உங்களை என் குடும்பமாக உணர்ந்து இந்த இடத்தில் இந்த விஷயத்தை சொல்கிறேன்; ஆமாம், நான் தன்சிகாவை தான் முழுமையாக காதலிக்கிறேன...