இந்தியா, பிப்ரவரி 23 -- தன்னுடைய இளமையின் ரகசியம் இதுதான் என நடிகர் ரவிமோகன் பேட்டியளித்திருக்கிறார்.

ஐசரி கணேஷ் சகோதரியின் கடை திறப்பு விழாவில் நடிகர் ரவி மோகன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய நடிகர் ரவி மோகன் கூறுகையில், 'ஒரு பியூட்டி பார்லர் திறக்க வந்திருக்கேன் என நினைக்கும்போது இதை விட வேறு என்ன அழகு. நான் வந்து இங்கு ஒரு கெஸ்ட்டாக வரல. ஒரு பிரதராக தான் வந்திருக்கேன். ஐசரி கணேஷ் சார் குடும்பத்தினர் வீட்டுக்கு எப்போது சென்றாலும் எனக்கு நல்ல வரவேற்பு கொடுப்பாங்க. கண்டிப்பாக இது நல்லாத் தான் வரும். இது உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும். ஐசரி கணேஷ் சார் ஒரு விஷயத்தை ஆரம்பித்தால் அதை ரிசர்ச் செய்யாமல் ஆரம்பிக்கவே மாட்டாங்க. ஏனென்றால், அவங்கள பல வருஷமாகத் தெரியும் என்பதால் சொல்கிறேன்.

ஒரு கார் வாங்கணும் என்றால் கூட, முழுதாக ரிசர்ச்...