இந்தியா, மார்ச் 9 -- விஜயகாந்த், கார்த்திக், சரத் குமார், பிரபு, முரளி, ராஜ் கிரண், பிரபு தேவா, மாதவன், ஜெய், ஜி.வி.பிரகாஷ், அதர்வா, சத்யராஜ், மிர்ச்சி சிவா, விஜய் ஆண்டனி, அருண் விஜய் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து எண்ணற்ற படங்களைத் தயாரித்து இருக்கிறார், டி.சிவா.

அத்தகைய தயாரிப்பாளர் டி. சிவா தன்னுடைய திரைப்பட கதாநாயகர்கள் பற்றியும் திரைப்படம் உருவான விதம் பற்றியும் பல சுவையான தகவல்களை டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலில், சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சித்ரா லட்சுமணனிடம் 2023ஆம் வருடம் ஜூலை 14ஆம் தேதி பகிர்ந்துள்ளார். அந்தப் பேட்டி வைரல் ஆகி இருக்கிறது. அதன் தொகுப்பு:-

''படத்தயாரிப்பாளர் ஆகத்தான் சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். தற்போது நடிகர், பல விளம்பரப் படங்களின் இயக்குநராக இருக்கீங்க. என்ன ஆகணும்னு சினிமாவில் வ...