திருச்சி,சென்னை, மார்ச் 24 -- திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

''தி.மு.க.,வினர் ஆபாச பேச்சுக்களுக்கு கை தட்டுபவர்களாக மாறி கொண்டிருக்கின்றனர். 1967 முதல் மாய உலகத்திற்குள் சிக்கி இருக்கின்றனர். தமிழகத்தை விட்டு வெளியே சென்றால், இந்த நாட்டின் வளர்ச்சி இவர்களுக்கு தெரியும். மக்கள் மனநிலை என்னவென்றே தெரியாமல், ஆட்சியில் இருப்பதால் தி.மு.க.,வினருக்கு பயம். அதனால், தினமும் புது புது பொய்யை கட்டவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றனர். நம்முடைய குழந்தைகள் நன்கு படிக்க வேண்டும். நம்முடைய கஷ்டம் நம்முடைய குழந்தைகளுக்கு வரக்கூடாது என்ற ஒற்றை எண்ணம் தான். மோடி பிரதமரானவுடன் மாணவ, மாணவியரின் முன...