இந்தியா, ஜூன் 1 -- கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட ஆதரவு கர்நாடக ரக்ஷன வேதிகே (கே.ஆர்.வி) அமைப்பின் உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை பெங்களூரின் காமாட்சிபாளையாவில் உள்ள விக்டரி தியேட்டருக்கு வெளியே போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

மேலும் படிக்க | கமல்ஹாசன் என் குரு.. நான் மணிரத்னத்துடன் வளர்ந்தது போல உணர்கிறேன்- தக் லைஃப் பட புரொமோஷனில் த்ரிஷா

பிரவீன் ஷெட்டி தலைமையில் நடந்த இந்தப்போராட்டத்தில் கலந்து கொண்ட போராட்டக்காரர்கள் படத்தை திரையிட வேண்டாம் என்று தியேட்டர் உரிமையாளர்களை எச்சரித்தனர்.

இதுகுறித்து பிரவீன் ஷெட்டி கூறுகையில், கமல்ஹாசன் கன்னடத்தை அவமதித்து விட்டார். இந்த படத்தை இங்கு வெளியிட அனுமதிக்க முடியாது என்று விக்டரி சினிமா நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். கர்நாடகாவ...