இந்தியா, மார்ச் 27 -- "டெல்லி மிட்டா மிராசுகள் எடப்பாடி பழனிசாமியைத்தான் உருட்டமுடியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அல்ல" என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் வகையில் 'அறிவுக்களம்' என்ற இரண்டு நாள் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது," என்று அவர் கூறினார். மேலும், தமிழை மையப்படுத்தி 'தமிழ் மகள்' என்ற தலைப்பில் பெரியார் திடலில் 17 கல்லூரிகளை ஒருங்கிணைத்து, 2000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்ற உரை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும் அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, திராவிட மாடல் ஆட்சியின் பெண்களுக்கான சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியும் நடத்தப்பட்டது.

"வெகு விரைவில் ...