இந்தியா, மார்ச் 13 -- தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் விற்கப்படும் மதுபான விற்பனையில் ரூபாய் ஆயிரம் கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளது என அமலாக்கத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பான செய்தியாக மாறி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "இந்த செய்திக் குறிப்பை இப்போது தான் படித்தேன். நாங்கள் முதலில் இருந்தே யூகித்தோம். ஊடகங்களில் அரசல் புரசலாக செய்தி வந்த போதே எங்களுக்குத் தெரியும். நாங்கள் எதைக் குறித்து பயந்தமோ அது அமலாக்கத்துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கையின் வாயிலாக உண்மையாகியுள்ளது. சத்தீஸ்கரிலும், டெல்லியிலும் என்ன மதுபான மோசடி நடந்ததோ அதை விடை...