இந்தியா, மார்ச் 20 -- டாஸ்மாக் நிறுவனத்தில் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்து இருக்கலாம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அமலாக்கத்துறை வெறும் 20 சதவீத இடங்களில் மட்டும்தான் சோதனை நடத்தி உள்ளனர். இதிலே நடந்த விஞ்ஞான பூர்வமான ஊழல் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டிவிட்டது. நண்பர் அண்ணாமலை கூறுவது போல 40 ஆயிரம் கோடியை தாண்டி ஊழல் நடந்திருக்கலாம். அது யாருடைய பையில் சென்றது? மக்களின் வரிப்பணம். ஆனால் அதை பற்றி பேசாமல் அதிமுக பற்றியே ஊடகங்கள் பேசுகின்றன. சட்டப்பேரவையில் இரண்டு பேர் சிரித்து பேசினால் அதை ஒரு கேள்வியாக எடுத்துக் கொள்கிறீர்கள். டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசு சென்று உள்ளது. எங்கு வேண்டுமானாலும் சோதனை செய...