இந்தியா, மார்ச் 14 -- டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி முறைகேடு நடந்து உள்ளதாக அமலாக்கத்துறை கூறிய குற்றச்சாட்டுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயாத்தீர்வை துறைஅமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து உள்ளார்.

மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுவரையறை என்ற போர்வையில் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் ஒன்றிய அரசின் முகமூடிகளை தோலுரித்து காட்டும் வகையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். 'தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!' என்ற முழக்கம் தமிழ்நாட்டின் அடித்தட்டு மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கிறது. இதை பொறுத்துக் கொள்ளாத ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை ஏவி டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தி உள்ளது.

பல்வேறு முதல் தகவல் அறிக்கையில் பதியப்பட்ட குற்றவழக்குகள் குறிப்பிடப்பட்ட நிலையில் என்று அமலாக்கத்துறை தனது செய்தி குறிப்பில் சொல்லி உள்ளது. எந்த முதல்...