இந்தியா, மார்ச் 23 -- டாஸ்மாக் ஊழல் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக இருக்கும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார்.

அமமுகவுக்கு உட்பட்ட திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழகம் சார்பாக அமைக்கப்பட்ட நீர் மற்றும் மோர் பந்தலை திறந்து வைத்த பின்னர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

தொகுதி வரையறை குறித்து பேசிய டிடிவி தினகரன், வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகரித்தால், அதே விகிதாச்சாரத்தில் தமிழ்நாட்டிலும் தொகுதிகள் உருவாகும். இதுதான் உண்மை. ஆனால், மக்களை திசை திருப்புவதற்காக பொய்யான தகவல்களைப் பரப்புகிறார்கள். மத்திய அரசு இன்னும் முடிவெடுக்காத நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா விகிதாச்சார அடிப்படையில் முடிவு செய்யப்படும் என்று மட்டுமே கூறியுள்ளார். எந்த முடிவும் எட்டப்பட்டாத நிலையில...