இந்தியா, மே 17 -- அறிமுக இயக்குநர் அபிஷன் விஜேத் இயக்கி வெளியாகியுள்ள டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் விமர்சன ரீதியாக பலரது பாராட்டைப் பெற்றது. அதன் பலனாக மக்கள் பலர் படத்தை பார்க்க வந்தனர்.

இப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகிபாபு, ரமேஷ் திலக் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப்படத்தை அண்மையில் பார்த்த ரஜினிகாந்த் சசிகுமாரை தொடர்பு கொண்டு தன்னுடைய பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க | 'சூர்யா ரெட்ரோ வசூலை விட சசியோட டூரிஸ்ட் ஃபேமிலி பட வசூல் அதிகம்' - மேடையில் ஓப்பனாக பேசிய விநியோகஸ்தகர்!

இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் சசிகுமார் பதிவிட்டதாவது, 'படம் சூப்பர் என்று யார் சொன்னாலும் மனம் சொக்கிப்போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால் சந்தோஷத்திற்கு சொல்லவா வேண்டும்; 'அயோத்தி' 'நந்தன்' படம...