இந்தியா, மார்ச் 9 -- திமுகவை வீழ்த்த யாருடனும் கூட்டணி வைக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் காணொளிக் காட்சி மூலம் (Video Conference) மூலம் அதிமுகவில் அமைப்பு ரீதியாக செயல்படும் 82 மாவட்டங்களுக்கான மாவட்டப் பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாவட்டச் செயலாளர்கள், தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர,...