இந்தியா, மார்ச் 10 -- செயல்படுத்தாத திட்டத்திற்கு நிதி கேட்பது ஏன் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போலி அவதூறுகளையும், பிஎம் ஸ்ரீ திட்டப் பள்ளிகளுக்கு முன்பு ஆதரவு, தற்போது எதிர்ப்பும் என்று, தமிழக மக்களிடத்தில் நாடகம் அரங்கேற்றி வரும் தமிழக அரசையும், தமிழக முதல்வரையும் கண்டித்து மாண்புமிகு மத்திய இணையமைச்சர் திரு.எல்.முருகன் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை: திமுகவினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் இன்று அவதூறுகளை அள்ளி வீசியுள்ளனர். மொழியை வைத்து மீண்டும் ஒருமுறை அரசியல் செய்துள்ளனர்.

மாண்புமிகு மத்திய கல்வியமைச்சர் திரு.தர்மேந்திர பிரதான் ஜி அவர்கள் நாடாளுமன்றத்தில் இன்று திமுகவினருக்...