சென்னை, செப்டம்பர் 9 -- திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (09-09-2025) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில், திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசியது இதோ:

''கடந்த பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில், படுபாதாளத்துக்குப் போன தமிழ்நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுத்து, 11.19 விழுக்காட்டு வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக நம் திராவிட மாடல் ஆட்சியில்உயர்த்தியிருக்கிறோம். இதன் அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிடுவதற்காக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றேன்.

இந்தப் பயணத்தை தொடங்குவதற்கு முன், இது 'ஹிட்' அடிக்கும் என்று சொன்னேன்.சொன்ன மாதிரியே, 15 ஆயிரத்து 516 கோடி ரூபாய்க்கான முதலீடுகளை ஈர்த்து 'சூப்பர் ஹிட்'அடித்துள்ளது. இந்த வெற்றிப் பயணத்தை நிறைவு செய்துவந்தபோது, நீங்கள் ...