இந்தியா, பிப்ரவரி 21 -- சென்னையில் வாடகை கட்டமுடியாத சூழலில் திரை கலைஞர்கள் இருப்பதாக தமிழ்நாடு அரசிடம் தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர் மற்றும் தென்னிந்திய திரைப்படத்தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வமணி கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் கலைஞர் கருணாநிதி காலத்தில் வழங்கப்பட்ட நில ஆணையை புதுப்பித்து திரைச்சங்க நிர்வாகிகளிடம் அரசு சான்று வழங்கியது.

இந்நிலையில் தென் இந்திய நடிகர் சங்கம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றியது பற்றி பேசிய தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் கூறும்போது, '' வணக்கம். 15 ஆண்டுகளுக்கு முன்பாக டாக்டர் கலைஞர் கருணாநிதி ஐயா அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது, சினிமா சார்ந்த தொழிலாளர்களின் வளர்ச்சிக்காக, எதிர்காலத்திற்காக, முன்னேற்றத்திற்காக, சென்னையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் இருக்கும் பையனூர் என்னும...