இந்தியா, மார்ச் 22 -- சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் மார்ச் மாதத்துக்குள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

இந்நிலையில், படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளார். படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

''சல்மான் கான் போன்ற ஒரு சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுக்கும்போது, ஸ்கிரிப்ட்டை மட்டுமே இறுகப்பிடித்துக்கொண்டு படம் எடுப்பது கடினம். அவர் தனது ரசிகர் பட்டாளத்தை பூர்த்தி செய்வது முக்கியம் என்றும் கூறினார்'' என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "நீங்கள் சூப்ப...