காஞ்சிபுரம், செப்டம்பர் 9 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம்.. தமிழகத்தை மீட்போம்' என்கிற பெயரில் பிரச்சாரத்தை தொடங்கி, கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கு மேல் தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துவிட்டார். அடுத்தடுத்து பிரசாரங்களையும் தீவிரப்படுத்தி வருகிறார்.

இதற்கிடையில் புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய், மாநாட்டை தொடர்ந்து மக்களை சந்திக்கும் பிரசாரத்தையும் இந்த மாதத்தில் தொடங்குகிறார். அன்புமணி ராமதாஸ் ஒருபுறம், பிரேமலதா விஜயகாந்த் ஒருபுறம் என, ஒவ்வொரு கட்சிகளும் தங்களால் முடிந்த பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இப்படி அரசியல் களம், சூடுபிடித்து வரும் நிலையில், திமுக தரப்பில் அமைதி நிலவி வந்தது.

இந்நிலையில் தான், திமுகவின் இளைஞரணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், தன்னுடைய பிரசாரத்தை இன்று முதல் தொடங்குக...