இந்தியா, செப்டம்பர் 4 -- தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து நூறாண்டுகள் ஆகிவிட்டன. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பெரியார் 1925 இல் சுயமரியாதை இயக்கத்தை துவங்கினார். 1929 இல் நடைபெற்ற மாநாட்டில் சமூக விடுதலை, பெண் சுதந்திரம் ஆகியவற்றை அடிப்படை இலக்குகளாக முன்வைத்தார். பெரியார் காலத்தில் தொடங்கிய சமூக நீதிப் பயணம் நூறாவது ஆண்டில் மு.க. ஸ்டாலின் காலத்திலும் தொய்வின்றி பயணிக்கிறது.

சுயமரியாதை இயக்கத்தின் நூறாண்டுக் காலப் பயணம் ஏனைய அரசியல் இயக்கங்கள் எதிர்கொள்ளாத அளவுக்கு வினோதமான இடையூறுகளை எதிர்கொண்டது. சுயமரியாதை இயக்கம் வெகுமக்களின் ஜாதி மத நம்பிக்கைகளை எதிர்கொண்டு முன்னேற வேண்டி இருந்தது. ஏனைய அரசியல் இயக்கங்களுக்கு இத்தகைய சாமானிய மக்களின் நம்பிக்கைகளோடு போராட வேண்டிய நெருக்கடி இருந்ததில்லை. வியக்கத்தக்க வகையில் அந்த...