இந்தியா, ஏப்ரல் 6 -- தமிழ்நாட்டையே திரும்பி பார்க்க வைத்து சில நாட்களுக்கு அந்த செய்தியில் இருந்து வெளியே வர முடியாத அளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியது சீரியல் நடிகை விஜே சித்ரா மரண வழக்கு. இந்த வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வந்ததில், அவர் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் படிக்க| சின்னத்திரை நடிகை விஜே சித்ரா மரண வழக்கை 6 மாதத்தில் முடியுங்கள்- நீதிமன்றம்

இந்த தொடர் சம்பவங்களின் சூடு தணிவதற்குள் சித்ராவின் அப்பா மன உளைச்சலால் உயிரிழந்தார். இது தமிழ் திரையுலக ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதே சமயத்தில் இந்த வழக்கு தொடர்பாக பல வதந்திகளையும் பரப்பினர். இப்போது, இந்த சம்பவம் தொடர்பான பேச்சுகள் எதுவும் எழாமல் இருக...