இந்தியா, மார்ச் 3 -- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் அநாவசியமாக கொடுமைப்படுத்துவதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டி உள்ளார்.

தஞ்சாவூரில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் காவல்துறை நடந்து கொண்ட விதம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், காவல் ஆய்வாளரின் செயல் வன்மையாக கண்டிக்கத் தக்கது. நோட்டீஸை ஒட்டிவிட்டு போக வேண்டியதுதானே. அதன் பிறகு ஏன் வீட்டுக்குள் செல்கிறீர்கள். இந்த அரசாங்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கரை சரியான முறையில் சீமான் அவர்கள் விமர்சித்து வருவதால், ஈ.வெ.ராமசாமியின் கைக்கூலிகள் மோசமான நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவி...