இந்தியா, பிப்ரவரி 23 -- நாம் தமிழர் கட்சியின் காளியம்மாள் திமுகவிற்கு வந்தால் அவரை ஏற்பது குறித்து தமிழக முதலமைச்சர் முடிவு செய்வார் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.

அது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். கட்சியில் இருந்து செல்லலாம் என சீமானே சிக்னல் கொடுத்துவிட்டார். அப்படி வந்தால் அவரை ஏற்பது மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முடிவு.

தமிழ்நாட்டுக்கு நியாமாக கொடுக்க வேண்டிய கல்வித் தொகையை கூட மத்திய அரசு கொடுக்க மறுக்கின்றது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு கஜானா காலியாக இருந்தாலும் மதிநுட்பத்துடன் ஆட்சியை இயக்கி வருகிறார். கடுமையான நிதி பற்றாக்குறை உள்ளது. எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் நிதியை நிறுத்தினாலும் எங்கள் பணி தொடரும். இருமொழிக் கொள்கையில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சீமான் எதை வைத்து இப்படி சொல்கிறார்...