இந்தியா, மே 25 -- தக் லைஃப் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அப்போது விழா மேடையில் நடிகர் கமல்ஹாசன் பேசியது வைரல் ஆனது.

விழா மேடையில் பேசிய கமல்ஹாசன், '' இப்போ நான் ஆரம்பிக்கலாமா? உயிரே உறவே தமிழே.. அரசியலுக்கு போனபின், அரசியல் தலைவர்கள் ஒவ்வொருத்தவங்களும் பேசுறது மாதிரி, இப்படி உங்களுக்குன்னு ஒன்று கொண்டு வந்துட்டீங்களான்னு கேட்டாங்க.

நான் என் தமிழகத்தைப் பற்றி, என் தமிழ் சினிமாவைப் பற்றி, என் தமிழைப் பத்தி பேசிட்டு இருக்கேன். இது அரசியல் சார்ந்தது அல்ல. இது என்னைச் சார்ந்தது, நம்மைச் சார்ந்தது. உயிரே உறவே தமிழே.. அது முதல் வரிசையில் இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

நான் வழக்கமாக கருப்புக் கண்ணாடி போட்டுட்டு வரமாட்டேன். இருட்டில் தடுக்கி விழுந்திடக் கூடாதுன்னு பயம் இருக்கும். அதுபோக, உங்களை சரியாகப் பார்க...