இந்தியா, மே 20 -- சிவகங்கை மாவட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் நடந்த கல்குவாரியில் பாறை மற்றும் மண் சரிந்து, விழுந்த விபத்தில் உயிரிழந்த ஐந்து பேரின் குடும்பத்தினருக்கு, நான்கு லட்ச ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

இந்த விபத்து தொடர்பாக அறிக்கை விட்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், ''சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், மல்லாக்கோட்டை கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான கல் குவாரியில் இன்று (20.5.2025) காலை எதிர்பாராதவிதமாக பாறை மற்றும் மண் சரிந்து விழுந்த விபத்தில் கல் குவாரியில் பணி செய்துகொண்டிருந்த திரு.முருகானந்தம், திரு.ஆறுமுகம், திரு.கணேசன், திரு-ஆண்டிச்சாமி மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேரந்த திரு.ஹர்ஷித் ஆகிய ஐந்து நபர்கள் உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த ...