கோயம்புத்தூர்,கோவை, மார்ச் 22 -- வீட்டு உபயோக சிலிண்டர் விற்பனையில் 3200 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், அமலாக்க துறை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, திமுகவின் கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத் தலைவர் வே.கதிர்வேல் சார்பில் கோவை முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளனர்.

மேலும் படிக்க | SP Velumani : 'அதிமுக பூத் கமிட்டி விபரங்களை சேகரிக்கும் போலீஸ்' எஸ்.பி.வேலுமணி எச்சரிக்கை!

டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடி அளவிற்கு மோசடி என அமலாக்க துறை தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது. டாஸ்மாக் நிர்வாகம் சார்பில், விசாரணைக்கு தடைக் கேட்டு, உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க பாஜக சார்பில் டாஸ்மாக் கடைகளில் முதல்வரின் புகைபடங்களை ஓட்டி, போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக கைது நடவ...