திருவையாறு,பாபநாசம்,தஞ்சாவூர், ஜூலை 22 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. இன்று பாபநாசம், தஞ்சாவூர் மற்றும் திருவையாறு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். பாபநாசம் தொகுதிக்குட்பட்ட அம்பர்லா பாயின்ட், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார் எடப்பாடி பழனிசாமி.

அப்போது அவர், "பாபநாசம் நகரமே குலுங்குகின்ற அளவுக்கு மக்கள் வெள்ளம் கடல் போல் காட்சியளிக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை எம்ஜிஆர் என்ற மாமனிதரால் தொடங்கப்பட்ட கட்சி, அம்மா சிறப்பான ஆட்சி கொடுத்த கட்சி, பொன்விழா கண்ட கட்சி. 30 ஆண்டுகாலம் ஏராளமான நலத் திட்டங்களை நிறைவேற்றிய கட்சி. இந்த 30 ஆண்டுகளில்தான் தமிழகம் இந்தியாவின் மிக உயர்ந்த நிலைக்கு வந்துள்ள...