இந்தியா, ஜூன் 17 -- நடிகை ஜெனிலியா டி'சோசா நீண்ட வேலை நேரம் மற்றும் தனது தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை எவ்வாறு சமநிலைப்படுத்துகிறார் என்பது பற்றி பேசியுள்ளார். ஜெனிலியா ஜூம் உடனான உரையாடலில், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்வதாகவும், அது "கடினமானது தான் ஆனால் சாத்தியமற்றது அல்ல" என்றும் கூறியுள்ளார்.

மேலும் படிக்க| 22 வருஷமா காத்திருந்து பெற்ற ஹக்.. நெகிழ்ச்சியில் கண்ணப்பா நடிகர் செய்த சம்பவம்.. இதான் இப்போ ட்ரெண்டே!

தீபிகா படுகோன் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கும் ஸ்பிரிட் படத்தில் 8 மணி நேர வேலை நேரத்தை ஏற்க மறுத்ததால் வெளியேறியதாக கூறப்படுகிறது. இது நடிகர்களுக்கான வேலை- வாழ்க்கை சமநிலை குறித்த விவாதத்தைத் தூண்டியது. இந்த நிலையில், அதுகுறித்து பேசிய டநடிகை ஜெனிலியா டிசோசா 10 மணி நேரம் வேலை செய்வது சாத்தியமற்றது அல்ல என்று கூறுகிற...