இந்தியா, ஏப்ரல் 30 -- லெவன் என்னும் திரைப்படம் வரும் மே 16ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இப்படத்தை சுந்தர் சியின் உதவி இயக்குநராக இருந்த லோகேஷ் அஜ்லிஷ் இயக்கியிருக்கிறார். இப்படம் தமிழ்,தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் தெலுங்கு நடிகரான நவீன் சந்திரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் இசையினை டி.இமான் செய்திருக்கிறார்.

இப்படத்தில் இசையமைத்த அனுபவத்தை டி.இமான் கூறியிருப்பதாவது, '' லெவன் திரைப்படம் தான் என்னுடைய முதல் பக்திகரமான கிரைம் திரில்லராக அமைஞ்சது. நான் நிறைய படங்கள் ஓடிடியில் பார்க்கும்போது, கிரைம் திரில்லர் படங்கள் தான் பார்ப்பேன். ஏனென்றால், அதுதான், தூண்டுதலாகவும், இணைந்து ஒன்றிப்போறது மாதிரியும் இருக்கும். அது கிளைமேக்ஸ் வரும் வரை பயங்கரமாக தீவிரமாக உட்கார்ந்து படம் பார்த்திட்டு இருப்பேன். நிறைய கமர...