இந்தியா, மே 7 -- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று (மே 07) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், '9 இடங்களில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். காஷ்மீர் தீவிரவாத சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியர்களின் ஆன்மா சாந்தி அடையும். காங்கிரஸ் முதல்வராக இருக்கக்கூடிய ரேவந்த் ரெட்டி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியதற்காக என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் படிக்க | டாப் 10 நியூஸ்: பிரதமரை பாராட்டிய ரஜினி முதல் இன்று நடைபெறும் போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை வரை!

இந்தியா நடத்திய தாக்குதலுக்கு எந்த நாடு வருத்தமடைந்தாலும் அதைப்பற்றி எனக்கு ...