இந்தியா, மே 14 -- திண்டுக்கல் மாவட்டம் மலைக்கோட்டையில் நடைபெற்ற கிரிவலத்தில் நடிகர் ரஞ்சித் பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் குறித்து விமர்சித்தார். தமிழ்நாடு ஆன்மீக பூமி. நாம எல்லாம் சேர்ந்து ஒரு கோயில் கட்டுறது வேற. ஆயிரம் ஆண்டுக்கு முன்பாக சுயம்பாக ஒரு கடவுள் உருவாகியது என்பது வேறு. நான் இன்று மக்களோடு மக்களா முளைப்பாரி எடுத்துட்டு கிரிவலம் போயிட்டு இருக்கோம் என்றார்.

மேலும் படிக்க| ரவி மோகன் - ஆர்த்தி பஞ்சாயத்தில் தூக்கத்தை தொலைத்த கூல் சுரேஷ்.. நைட்டு வந்த போனால் உருளும் தலை..

மேலும் பேசிய அவர், "அரசியல்ங்கிறது ஒரு பிழைப்பு. அதில் சாதிகளை விட்டு பிழைப்பதோ, மதங்களை விட்டு பிழைப்பதோ இருக்குது. இங்க இருக்க மக்களுக்கு சாதியும் கிடையாது மதமும் கிடையாது. கிரிவலம் வந்த மக்கள் வேண்டுவது கடவுள...