இந்தியா, மார்ச் 20 -- சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னால் அமைச்சர் சேகர்பாபு கோபப்படுவது ஏன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், எம்.எல்.ஏவுமான வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.

சட்டப்பேரவையில் வேல்முருகன் பேச்சுக்கு சபாநாயகர், அமைச்சர் சேகர்பாபு, அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். 'வேல்முருகன் அதிக பிரசங்கித்தனமாக நடந்து கொள்கிறார்' என முதலமைச்சர் குற்றம்சாட்டி இருந்தார்.

இது தொடர்பாக பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தெலங்கானாவில் உள்ள சிபிஎஸ்சி, ஐசிஎஃப் உள்ளிட்ட பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளிலும் தெலுங்கை படிக்க வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இது போன்று தமிழக அரசும் உத்தரவிட வேண்டும் என சட்டமன்றத்தில் பதிவு செய்தேன். நான் சொல்ல வருவதை புர...