இந்தியா, ஜூலை 8 -- கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட அதிமுக சார்பில், மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். வேறு கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைத்து கொண்டவர்களை வரவேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, "ஒருங்கிணைந்த மாவட்டத்தின் சார்பாக மிக சிறப்பான எழுச்சியான, சுற்றுப்பயணத்துக்கு நடுவே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக இணைந்த அனைவரும் சிறப்பான முறையில் செயல்படவேண்டும். இந்தியாவிலேயே ஜனநாயக மிக்க ஒரு கட்சி என்றால் அது அதிமுக தான்.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்க...