இந்தியா, மார்ச் 17 -- சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை நீக்கக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவை நீக்கக்கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக இன்று காலை மார்ச் 17-ல் அறிவிக்கப்பட்டது.

சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டுவந்த இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றியடைய 118 வாக்குகள் தேவைப்பட்டது. தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டதால், சபாநாயகர் அப்பாவு வெளியேறிய நிலையில் துணைசபாநாயகர் கு.பிச்சாண்டி அவையை வெளிநடத்தினார்.

தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க செங்கோட்டையன், ஓபிஎஸ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்த நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்கப்பட்டது. அங்கு, பாஜக, பாமக உறுப்பினர்கள் யாரும் பேரவையில் இல்லை.

இதைத் தொடர...