இந்தியா, மே 11 -- பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் டூயுட் திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.

நடிகர் ஜெயம் ரவியை வைத்து 'கோமாளி' என்னும் படத்தை இயக்கி, முதல் படத்திலேயே ஹிட் இயக்குநர் ஆனவர், பிரதீப் ரங்கநாதன். அடுத்து, 'லவ் டுடே' தானே இயக்கி, கதாநாயகனாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார், பிரதீப் ரங்கநாதன்.

இதற்கடுத்து அவர் நடித்த 'டிராகன்' படமும் தமிழ், தெலுங்கில் வெற்றியடைந்தது. இதன்மூலம், அடுத்தடுத்த வெற்றிகளுக்குப் பிறகு அவர் இப்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில், புதிய பான் இந்தியப் படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க: 'என்னோட சோல்மேட்ட பாத்துட்டேன்.. நீங்க வாழ்க்கையில சந்தோஷமா இல்லை.. அதுனால என்ன குறை சொல்றீங்க'- பாடகி கெனிஷா

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வ...