இந்தியா, மார்ச் 13 -- சொந்த சகோதரரையே கண்டுபிடிக்க முடியாத செந்தில் பாலாஜியா அனல் மின் நிலையத்தில் நடந்த நிலக்கரி திருட்டை கண்டுபிடிக்க போகிறார் என வழக்கறிஞரும், திமுக எதிர்ப்பாளருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார்.

வடசென்னை அனல் மின் நிலையத்தில் நடந்த நிலக்கரி திருட்டு குறித்து, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 2021 ஆகஸ்ட் 20 அன்று பேசியதாவது: அங்கு 2.38 லட்சம் டன் (238,000 டன்) நிலக்கரி கணக்குகளில் இருந்தபோதிலும் இருப்பில் இல்லை என்று தெரியவந்துள்ளது. இந்த நிலக்கரி ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு, அதில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும், மற்ற அனல் மின் நிலையங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறி இருந்தார்.

அவரது முந்தைய பேட...