இந்தியா, பிப்ரவரி 22 -- நடிகை நக்மா பேட்டி: காதலன் படத்தில் இடம்பெற்ற கோபாலா கோபாலா பாட்டால் பாட்ஷாவில் தான் நடிகை ஆனேன் என்று நடிகை நக்மா பேசியிருக்கிறார்.

பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலில் ஜூலை 29ஆம் தேதி, 2020ஆம் ஆண்டு நடிகை நக்மா கொடுத்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.

நான் காதலன் படத்தில் கோபாலா கோபாலா பாடலில் ஆடிய காட்சிகளை ரஜினி சார் பார்த்தாங்க. ரஃப் ஆக எடிட் செய்து வைத்திருப்பாங்க இல்லையா, அதை ரஜினி சார் பார்த்தாங்க. ஏனென்றால் அப்போது புது நடிகை இல்லையா.

அப்போது பி.வாசு சாருடைய கதையை அவர் ரஜினி சாரை வைத்து மன்னன் என்னும் பெயரில் இயக்கினார். அதே நேரத்தில் தெலுங்கில் இதே கதையை வைத்து கரான மொகுடு என்னும் படத்தில் விஜயசாந்தி மேடம்செய்த ரோலில் நான் சிரஞ்சீவி சார் கூட நடித்திருந்தேன்.

ஆனால், காதலன் படத்தில் வரும் 'கோபாலா கோபாலா' பாட...