இந்தியா, டிசம்பர் 10 -- குளிர்காலத்தில் உங்கள் தலைமுடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவேண்டுமெனில் நீங்கள் என்ன சாப்பிடவேண்டும் என்று தெரிந்துகொள்வது அவசியம். உங்கள் குளிர்கால ஆரோக்கியத்துக்கு முந்திரி, பாதாம், பிஸ்தா, கடலை, ஹசல் நட்ஸ் போன்றவற்றை சாப்பிடுங்கள். இந்த ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகள், உங்களுக்கு ஆரோக்கிய கொழுப்புக்களைக் கொடுக்கிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம். இது உங்கள் சருமத்துக்கு நன்மையைக் கொடுக்கிறது. உங்கள் தலைமுடி வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.

பாதாமில் பயோட்டின், வைட்டமின் இ மற்றும் மெக்னீசியச் சத்துக்கள் உள்ளன. இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிக்கிறது. உங்கள் தலைமுடியின் வேர்க்கால்களைக் காக்கிறது. தலைமுடியை வலுப்படுத்துகிறது. உங்கள் தலைமுடிக்கு இயற்கை பளபளப்பைக் கொடுக்கிறது. இது உங்கள் தலைமுடி ஆரோக்கியத்துக்க...