Chennai, மே 4 -- இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் இணைந்து நடித்திருக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வரவேற்பினைப் பெற்று இருக்கிறது.

பசங்க, வம்சம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, கடைக்குட்டி சிங்கம் ஆகியப் படங்களை இயக்கி, தமிழ் சினிமாவில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இயக்குநர் பாண்டிராஜ். இவரது ஒவ்வொரு படங்களிலும் ஜனரஞ்சகமான காமெடி ஆங்காங்கே கிச்சுகிச்சுமூட்டும்.

அத்தகைய இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு ஆகியோர் நடித்திருக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி வைரல் ஆகியிருக்கிறது. விஜய்சேதுபதியின் 52ஆவது படமான இப்படத்திற்கு 'தலைவன் தலைவி' எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸின் டி.ஜி. தியாகராஜன் வழங்க, செந்தில் தியாக...